கோபாலப்பட்டினத்தில் தண்ணீர் குழாய் உடைப்பை சீரமைக்க கோரிக்கைபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள நாட்டாணிபுரசக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் மக்கா 1-வது சாலையில் (பெரியபள்ளிவாசல் தெரு) தண்ணீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக ஓடுகிறது.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, கோபாலப்பட்டினம் பகுதி மக்களுக்கு, குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.ரேஷன் கடை அருகாமையில் (பெரிய பள்ளிவாசல் - கடற்கரை சாலை) சிறிய அளவிலான தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வினியோகம் செய்யும் போது, தண்ணீர் கடந்த நான்கு நாட்களாக வீணாக சாலையில் செல்கிறது.எனவே சிறிய அளவில் இருக்கும் போதே உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங் களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : நல்ல முகம்மது

Post a Comment

0 Comments