புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்



பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட காரீப் பருவத்திற்கான பயிர்கள், வருவாய் கிராமங்கள் மற்றும் பிர்கா ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு காரீப் பருவ பயிர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு 33 வருவாய் கிராமங்களும், உளுந்து பயிருக்கு 69 வருவாய் கிராமங்களும், துவரை பயிருக்கு 10 வருவாய் கிராமங்களும், நிலக்கடலை பயிருக்கு 168 வருவாய் கிராமங்களும், மக்காச்சோளத்திற்கு 13 வருவாய் கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சிறுதானியங்களான சோளத்திற்கு 7 பிர்காவும், கம்புக்கு 2 பிர்காவும், எள் பயிருக்கு 14 பிர்காவும், வெண்டைக்கு 1 பிர்காவும், மாவிற்கு 2 பிர்காவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் வெண்டை ஏக்கருக்கு ரூ.420 காப்பீடு கட்டணம் செலுத்தி பயிர் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை மாதம் 30-ந் தேதியும், நெல் ஏக்கருக்கு ரூ.580, எள் ஏக்கருக்கு ரூ.143 காப்பீடு கட்டணம் செலுத்தி பயிர் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை மாதம் 31-ந் தேதியும் ஆகும். மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.446, துவரை, உளுந்து ஏக்கருக்கு ரூ.315, நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.473 காப்பீடு கட்டணம் செலுத்தி பயிர் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி ஆகும். சோளம், கம்பு ஏக்கருக்கு ரூ.132 காப்பீடு கட்டணம் செலுத்தி பயிர் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி மற்றும் மா ஏக்கருக்கு ரூ.700 காப்பீடு கட்டணம் செலுத்தி பயிர் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 28-ந் தேதி ஆகும்.

பொது சேவை மையங்கள்

கடன் பெறும் விவசாயிகள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணைய மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய ரசீதை அந்தந்த பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments