R.புதுப்பட்டினம் அல் அமீன் மாணவர்கள் அணியினரால் நடத்தப்பட்ட நான்காம் ஆண்டு கிரிக்கெட் தொடர் முடிவுகள்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஒன்றியம் மீமிசல் அருகில் உள்ள  R.புதுப்பட்டினம் அல் அமீன் மாணவர்கள்  அணியினரால்  நான்காம் ஆண்டு கிரிக்கெட் தொடர் 09/06/2019 திங்கள்கிழமை அன்று அல் அமீன் மைதானத்தில் நடைபெற்றது.


இதில் R.புதுப்பட்டினம்,  கோபாலப்பட்டினம் , மீமிசல் மற்றும் சுற்றுவட்டார அணிகள் கலந்து கொண்டனர். ஆட்டம் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்றது.



இதில் முதல் பரிசு R.புதுப்பட்டினம் அல் அமீன் இளைஞர்கள்

இரண்டாம் பரிசு மீமிசல் ஸ்கூல் பாய்ஸ்

 மூன்றாம் பரிசு ஆர்.புதுப்பட்டினம் அல் முஃமின் அணியினர்  தட்டி சென்றனர்.

முதல் பரிசு:5000 வழங்கியவர் சிட்டி ஹார்டுவேர்ஸ் & எலக்ட்ரானிக்ஸ்

இரண்டாம் பரிசு:4000 வழங்கியவர் லக்கி எலக்ட்ரானிக்ஸ் மீமிசல்

மூன்றாம் பரிசு:3000 வழங்கியவர் M.T.K. அலி முஹம்மது

வெற்றி பெற்ற தொகையில் அல் அமீன் மன்றத்திற்கு தார்ப்பாய்  பல்பு மற்றும் கிரிக்கெட் ஸ்டெம்ப் மாணவரணி செயலாளர் முஹம்மது முபாரக் தலைமையில்  நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

குறிப்பு :

அல் அமீன்  மாணவர்கள் அணியினரால் நடத்தப்பட்ட போட்டியில் லுகர் மற்றும் அஸர் தொழுகை நேரத்தில் 20 நிமிடங்கள் போட்டிகள் நடைபெறவில்லை.

வெற்றி பெற்ற அணிகளுக்கு GPM MEDIA சார்பாக வாழ்த்துக்கள்

புகைப்படங்கள் உதவி , தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : கலந்தர் பாட்சா

Post a Comment

0 Comments