புதுகை மாவட்ட இளைஞர்களுக்கு TNPSC தேர்வுக்கு இலவசப் பயிற்சி



புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் மற்றும் புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 15 ஆம் தேதி தொடங்குகிறது.


இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னர் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும்.  கடந்த டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வில் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 33 பேர் வெற்றி  பெற்று பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல தொகுதி-2 தேர்வில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.15 பேர் தொகுதி 1-இல் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுத உள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசம் என்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத விண்ணப்பித்துள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் ஜெ. சுகந்தி தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 97864 41417, 94459 55451 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments