புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநோய்க்கான (மது அருந்துபவருக்கு) தீவிர சிகிச்சை வசதி உள்ளது.
இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் கூறினார்.கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மனநல திட்டத்தின்கீழ் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி முன்னிலை வகித்தார். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் ராதிகா பேசும்போது, கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் மனநல பிரிவு செயல்படுகிறது.
தொடர் சிகிச்சை தேவைப்படுவோர் மனநோய் மாத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக தனியார் மருத்துவமனைகளையோ, நிறுவனங்களையோ சார்ந்து இருக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் போதைக்கு அடிமையாவது பற்றியும், அதிலிருந்து மீண்டு வருதல் குறித்தும் அதில் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றியும் பொதுமக்களிடம் உரையாடினார். மேலும் குடிநோய்க்கான தீவிர சிகிச்சை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கிடைக்கிறது என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு மாவட்ட மனநல திட்ட குழுவினர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் செய்திருந்தனர். பொதுமக்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.