மீமிசலில் கடலோர பாதுகாப்பு குழும வெள்ளிவிழா கொண்டாட்டம்புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி  பிரிவு மீமிசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடலோர பாதுகாப்பு குழும  25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.


கடலோர பாதுகாப்பு குழும வெள்ளி விழா ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை கொண்டாடப்படுகிறது. இதில் கடலோர பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல்வளம் பாதுகாப்பில்  கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பங்கு என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில்  மணமேல்குடி  கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர்  அன்னலெட்சுமி, திருப்புனவாசல்  கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பா. ரகுபதி, மணமேல்குடி  கடற்கரை காவல் உதவி ஆய்வாளர் எஸ். ஜவஹர், ராஜ்குமார் மற்றும் மீமிசல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  பொன்.இருளப்பன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments