அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொடுதிரை திறப்பு விழா



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கின் விபரங்களை தெரிந்துகொள்ளும் தொடுதிரையை, சார்பு நீதிமன்ற நீதிபதி அமிர்தவேல் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.


இதுதொடர்பாக நீதிபதி அமிர்தவேல் பேசியதாவது:
 
இந்த தொடுதிரையின் பயன் என்னவென்றால் பொதுமக்கள் தங்களது வழக்கின் நிலை என்ன என்பதை வழக்குரைஞர்களிடம் கேட்கும் நிலையை மாற்றி,  வழக்கின் எண்ணை பதிவு செய்து, பின்னர் வழக்குரைஞரின் பெயரை பதிவு செய்தால், வழக்கின் நிலை, ஒத்திவைப்பு தேதி என அனைத்து விபரங்களையும் தொடுதிரை இயந்திரத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.

நிகழ்ச்சியில்  வழக்குரைஞர் சங்க தலைவர் கண்ணன், வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், ஜான்சி மகாராணி, அரசு வழக்குரைஞர் அ.ராஜசேகர், முன்னாள் செயலாளர் அமர், தெய்வரெத்தினம், மூத்த வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், எஸ். பத்மநாபன், பா. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments