அதிராம்பட்டினத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!!!



அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், ஷிஃபா மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 24/07/2019 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் பகல் 01.00 மணி வரை அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 

கண்புரை :
  • நோயாளிகள் முகாம் தினத்தன்றே மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
  • அவர்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்தும், தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம். 
  • அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. 
சர்க்கரை நோய் :
  •  உள்ளவர்களுக்கு கண்விழித்திரையில் அறிகுறி இல்லாமலேயே பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • இம்முகாமில் கலந்து கொண்டு உங்கள் விழித்திரையை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 
கண் நீர் அழுத்த நோய் :
  • 40 வயதிற்கு மேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கண்பார்வையை பாதிக்கும் வாய்ப்பு உண்டு. 
  • இந்த முகாமில் தங்களது கண்நீர் அழுத்தத்தைப் பரிசோதனை செய்து கொள்ளலாம். 
குழந்தையின் கண் நோய் :
  • பிறவி கண்புரை, மாறுதல், பிறவி கண்நீர்  அழுத்த நோய் மற்றும் மாலைக்கண் ஆகிய நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 
  • கிட்டப்பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் சுமார் ரூபாய் 300 விலையில் முகாம் நடக்கும் இடத்தில் கிடைக்கும்.

கண்புரை நோயாளிகள் கவனத்திற்கு..
உயர் இரத்த அழுத்த நோய்,  ஆஸ்துமா, சர்க்கரை நோய் இதயநோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பொது மருத்துவ பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமிற்கு வர வேண்டும். 

மேலும் மாற்று சேலை - வேஷ்டியுடன் வரவும்

இம் முகாமிற்கு வரும் போது  உங்கள் முகவரி சான்றின் நகலை  (வாக்காளர் அட்டை அல்லது ரேஷன் கார்டு , தொலைபேசி எண் ) கொண்டு வந்து சீட்டு பதிவு செய்யும் இடத்தில் கொடுக்கவும் 

என்றும் மக்கள் சேவையில் 
லயன்ஸ் குடும்பத்தினர் 
ஷிஃபா மருத்துவமனை 
அதிராம்பட்டினம் 

தொடர்புக்கு: 9952201631, 9442038961, 04373242324, 6374176350

Post a Comment

0 Comments