கோபாலப்பட்டினத்தில் தண்ணீர் குழாய் உடைப்பை ஆமை வேகத்தில் சரி செய்த ஊராட்சி நிர்வாகம்!!!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள நாட்டாணிபுரசக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் மக்கா 1-வது சாலையில் (பெரியபள்ளிவாசல் தெரு) கடந்த சில நாட்களாக தண்ணீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடியது.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, கோபாலப்பட்டினம் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு, குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடை அருகே (பெரிய பள்ளிவாசல் - கடற்கரை சாலை) சிறிய அளவிலான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வினியோகம் செய்யும் போது, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது என கடந்த 29/06/2019 அன்று நமது GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
முன்பு 

சரிசெய்யப்பட்ட பிறகு 

மேலும் 28/06/2019 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் GPM மீடியா சார்பாக கலந்து கொண்டு தண்ணீர் குழாய் உடைப்பு சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவரிடம் புகார் தெரிவித்திருந்தோம். அப்போது இது சம்மந்தமாக என் கவனத்திற்கு எதுவும் வரவில்லை என்றும் நீங்கள் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து தண்ணீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் ஓரிரு நாட்களில் அவை சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிவிரைவாக (ஆமை வேகத்தில்) செயல்பட்டு கடந்த 12/07/2019 வெள்ளிக்கிழமை அன்று சரி செய்யப்பட்டது.

அந்த தெரு வாசியான GPM மீடியாவின் வாசகர் கூறுகையில் ஆமை வேகத்தில் செயல்பட்டு குழாய் உடைப்பை சரிசெய்த கிராம நிர்வாக அலுவலருக்கு இதன் மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : சாகுல் ஹமீது

Post a Comment

0 Comments