புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனுராதா,எஸ்.ஐ காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை!!!ஆஸ்திரேலியாவின் சமோவா தீவில் 2019-க்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில், உலகின் பல்வேறு  நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த அனுராதா இந்தியாவுக்காகக் கலந்துகொண்டார்.

பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், அனுராதா ஸ்னாச் முறையில் 100 கிலோவும் கிளன் அண்ட் ஜெர்க் முறையில், 121 கிலோ என 221 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


அனுராதாவின் வெற்றியை நெம்மேலிபட்டி கிராமத்தினர் வெடி, வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். வெகுசிலரே தேர்ந்தெடுக்கும் பளுதூக்கும் விளையாட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் ஏராளமான பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.


எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கும் அனுராதா, பளு தூக்கும் போட்டிக்காவே, என்.ஐ.எஸ் என்ற ஒருவருட படிப்பை பஞ்சாபில் படித்துள்ளார். அவர், தஞ்சாவூர் தொகூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

நன்றி: விகடன்

Post a Comment

0 Comments