கோட்டைப்பட்டினம் ஊர் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்புஅன்புக்குரிய கோட்டைப்பட்டினம் வாழ் ஊர் பொது மக்களே கடந்த சில காலமாக நமதூர் சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கிறது.


இந்த விபத்துக்களில் பல நபர்கள் சிக்கி உடல்களில் பலத்த காயம் மற்றும் கை, கால்களை இழப்பது போன்ற தனது வாழ்க்கையை தொலைக்கும் அளவிற்கு கொடூரமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் ஒரு படி கூடுதலாக மனதையும்,கண்களையும் களங்க வைக்கும் அளவிற்கு உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விடயங்களில் நாம் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓரிரு தினங்கள் மட்டும் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் மேலும் ஆங்காங்கேயும் கூடி நண்பர்களுடனும் சொந்த பந்தங்களுடனும் பேசி விட்டு காலப்போக்கில் அந்த நிகழ்வுகளையும் மறந்துவிட்டு இருந்து விடுகின்றோம்.

ஆனால் அந்த வலிகளையும் வேதனைகளையும் காலம்பூராக சுமந்து கொண்டு இருப்பது பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர்கள் தான்.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக்கூடாது என்பதற்காக வேண்டி இதனை தடுக்கும் விதமாக மாபெரும் ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை (02/07/2019) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கோடைப்பட்டினம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவராக நமதூர் நலன் விரும்பிகள், சமுதாய அக்கறை கொண்ட சகோதரர்கள், அனைத்து கட்சி இயக்க சகோதரர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் நமதூர் whatsapp குழும நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறும்படி உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இவன்
முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகம் (வக்ஃப்)
கோட்டைப்பட்டினம்

Post a Comment

0 Comments