விழுப்புரம் அரசுப்பள்ளியில் பாஜக கொடி கலரில் போடப்பட்ட இருக்கைகள்!



விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் உட்காரும் பெஞ்சுகள் பச்சை, காவி கலந்த பாஜக கொடி நிறத்தில் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பெஞ்சுகள் அகற்றப்பட்டன.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்க விழா, செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா, பெண் குழந்தைகள் காப்போம் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார். மழலையர் பிரிவுகளுக்காக பள்ளியில் 5 வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்த வகையில் குழந்தைகள் அமரும் இருக்கைகள் பாஜக கொடி நிறத்தில் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இருக்கைகளின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இருக்கைகள் அகற்றப்பட்டன.

Post a Comment

0 Comments