கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மாயமான மூன்று மீனவர்களை மீட்கும் பணி தொடருகிறது. போலீசார் தகவல்அறந்தாங்கி அருகே படகு பழுதானதால் கடலில் சிக்கியுள்ள 3 மீனவர்களையும் மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஞாயிற்றுக்கிழமை கோட்டைப்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் சனிக்கிழமை இரவு மீன் பிடிக்க ஜோசப் மகன் கண்ணன் (38), ராமன் மகன் கண்ணன் (50) , வடிவேல் மகன் முருகேசன் (40) ஆகிய மூவரும் சென்றனர். அப்போது விசைப்படகில் வலை மாட்டிக் கொண்டதால், படகை இயக்கமுடியாமல் கடலில் தத்தளிப்பதாகவும், தங்களது வாக்கி டாக்கி மூலம் கட்டுமாவடியில் உள்ள மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.

மேலும்,  அம்மாபட்டினத்தில் இருந்து 14 கடல் மைல் தொலைவில் விசைப்படகு உள்ளதாகவும், 3 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோட்டைப்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments