கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி +1 மற்றும் +2 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் படிப்பிற்காக அரசால் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இவ்வாண்டு +1 மற்றும் +2 மாணக்கர்களுக்கு கணினி துரிதமாக வழங்கிட மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அரசு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் நிலை வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பேரில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த சில நாட்களாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோபாலப்பட்டினம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் +1,+2 மாணவர்களுக்கு லெனோவா நிறுவனத்தின் மடிக்கணினி நேற்றைய தினம் 19/08/2019 திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மாணவர்கள் உற்சாகம் பொங்க தங்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கும் 3 மாதம் கழித்து மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜமாத் தலைவர் ASM செய்யது முஹமது, இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை செயலாளர்  மு.இ. கலந்தர் மற்றும் மத்தீன் சார், GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர்கள் அலி அக்பர், SMY யூசுப், ரபீக்  அவர்கள் மற்றும் உறுப்பினர்கள், GPM பொது நல சேவை சங்க உறுப்பினர்கள் , ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிகணினி வழங்கி சிறப்பித்தனர்.


Post a Comment

0 Comments