பரமக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்புராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்தவர் உஸ்மான்.

இவர் தனது இரண்டு மகள்களுடன் மதுரை விமான நிலையத்தில் இருந்து, ராமநாதபுரத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

பரமக்குடி அடுத்த சோமநாதபுரம் நான்குவழி சாலை சந்திப்பில் கார் சென்ற போது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் உடனடியாக பிரேக் பிடிக்க முடியாமல் இருசக்கர வாகனம் மீது மோதிய கார், சாலை நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது இடித்து விபத்துக்குள்ளானது.இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பரமக்குடியை சேர்ந்த சங்கர், காரில் பயணித்த உஸ்மான் மற்றும் அவரது மகள்கள் ஹைநூல் அரசியா, தஸ்லிமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கார் ஓட்டுநர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

Post a Comment

0 Comments