தொண்டியில் த.மு.மு.க சார்பில் முப்பெரும் விழா..! 156வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு...!!!ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சமூக சேவர்கர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் சமூக நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விழாவில் மும் மதத்தினர் களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தது மக்கள் மத்தியில் அமோக வர வேற்பை பெற்றது.

தமுமுக தமிழகத்தில் மக்கள் மத்தியில் சமூக அக் கரையுடன் பல்வேறு நற் செயல்களை தன்னல மின்றி செய்து வருவது  மக்கள் மத்ததியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இதன் காரணமாக தமுமுக தமிழகத்தில் கடந்த 25 ஆண்டு கால மக்கள் சேவையால் நல் வளர்ச்சியடைந்து வருவதுடன் அதன் சமூக சேவை தற்போது பன் மடங்கு உயர்ந்துள்ளது என்பதற்கு பல்வேறு உதாரணங் களை கூறலாம்.

இயற்கை பேரிடர் ஏற்பட்டால் தமுமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் தானாக முன் வந்து நிர்வாகி களுடன் கை கோர்த்து தங்களிடம் உள்ள பணத்தை திரட்டி உடனடியாக இயற்கை பேரிடர் நடந்த ஊருக்கு சென்று மக்களுக்கு உரிய உதவிகளை செய்வதும், ஜாதி மத பேதமின்றி இயற்கை பேரிடரில் உயிரிழந்த வர்களின் சடலங்களை மீட்பதிலும் உன்னதமான சேவையை செய்து வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட தமுமுக நிர்வாகிகள், தொண்டர்களின் சேவை மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் ஒருபடி மேலே சென்று விடுகின்றனர்.

தொண்டியில் தமுமுகவின் முப்பெரும் விழா:தமுமுக தோன்றி மக்கள் சேவை செய்ய துவங்கியவுடன் முதன் முதலில் மக்கள் சேவைக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி தொண்டியில் நடந்தது. அதன்பின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமுமுகவின் சேவை விரிந்து ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்து தற்போது 156வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும் தொண்டியில் நடந்தது தமுமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டு மின்றி ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. தொண்டியில் 156வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா, சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா, சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடந்தது. முப்பெரும் விழாவில் மாவட்ட செயலாளர் தாகிர் சைபுதீன் கிராத் ஓதினார். தமுமுக மாவட்ட தலைவர் பட்டானி மீரான் வரவேற்றார்.விழாவில் பெருமை சேர்க்கும் விதமாக மும் மதங்களை சேர்ந்த வட்டார ஐக்கிய ஜமாத் துணைத் தலைவர் ஹசன் அலி பாஜில் ஜமாலி, இந்து தர்ம பரிபாலன சபை சின்னதம்பி, ராஜா, கிறிஸ்துவ மக்கள் மன்ற பாதிரியார் கிருஸ்து தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமுமுக மற்றும் மனிந நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ராமநாதபுரம் எம்.பி., நவாஷ் கனி, மமக மாநில பொது செயலாளர் அப்துல் சமது, துணை பொது செயலாளர் முகம்மது கவுஸ், தமமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மருத்துவ சேவை அணியின் மாநில செயலாளர் கிதுர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ராமநாதபுரம் தொழிலதிபர் சலி முல்லாகான், தொண்டி சுலைமான், வக்கீல் ஜீப்ரி உட்பட பலர் பேசினர். ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் முகம்மது ஜலாலுதீன் அன்வாரி, புனித சிந்தாதிரை மாதா ஆலயம் பங்கு தந்தை பாதிரியார் சவரிமுத்து, தேசிய நல்லாசிரியர் உதயகுமார், கோபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தன்னலமற்று பல்வேறு துறைகளிலும் மக்கள் சேவை செய்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரவிக்கும் வகையில் சமூக சேவகர்களுக்கான விருது  வழங்கப் பட்டது. தொண்டி தமுமுக நகர் தலைவர் காதர் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments