தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த பெரிய ஏரி 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாததால் நாளுக்கு நாள் ஏரி மைதானம் போலவும் ஊர் மக்கள் குப்பை கொட்டும் கிடங்காகவும் மாறிக்கொண்டிருந்தது.
இதனால் நீர்வரத்து பாதைகள் அடைக்கப்பட்டதால், பல ஏக்கர் பாசனத்திற்கு, பயன்பட்டு வந்த பெரிய ஏரி தற்போது தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது.
இதை பார்த்து கவலையடைந்த அப்பகுதி இளைஞர்கள் துளிர் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். பெரிய ஏரியை பயன்படுத்தும் முக்கிய பாசனதாரர்களான குருவிக்கரம்பை, முனுமாக்காடு கிராமத்தார்கள், இளைஞர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பெரிய ஏரியை தூர்வார இருக்கிறோம் என தெரிவித்தனர். இது தொடர்பாக துளிர் அமைப்பினர் குருவிக்கரம்பையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதையடுத்து குருவிக்கரம்பை கிராம பெரிய ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது. 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர் வாகனங்களை பயன்படுத்தி மண் எடுத்து முதற்கட்டமாக கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள், ஏரியின் வடிகால் வாய்கால்கள்,சாலை ஓரங்களில் உள்ள வாடிகால்களும் தூர்வாரப்படுகிறது. இப்பணிக்காக அரசை எதிர்பார்த்து காத்திராமல், தங்கள் சொந்த முயற்சியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை ஊரே பாராட்டுகின்றது. குருவிக்கரம்பை இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருந்தது கைஃபா கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் என்பது குறிப்பிடதக்கது. இதில் குருவிக்கரம்பை துளிர் அமைப்பினரும் கிராம முக்கிய பிரமுகர்களும் முன்னின்று பணிகளை செய்து வருகின்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.