புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2018-19 ஆம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது: விண்ணப்பிக்க அழைப்பு!!!



மாநில அளவில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமாமகேஸ்வரி அவர்கள்
தெரிவித்ததாவது.

ஊரகப் பகுதிகளில் தனிப்பட்ட முறையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வரும் ஊரக கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்த மாநில அளவில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது பெற
தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதியைச்சேர்ந்த தகுதியானோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பதாரர் கிராம ஊராட்சிப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாகவும் ஏதாவது ஒரு அறிவியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
பொது மக்களுக்கு பயன்தரத் தக்கதாக இருந்தால் மிகவும் வரவேற்கப்படும்.

2018-19 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு
இவ்விருது வழங்கப்படும். ஒரு கண்டுபிடிப்பாளருக்கு தலா ரூ.1,00,000 வீதம்
வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்
கிடைக்கப்பெறும். இவ்விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்தும் கண்டுபிடிப்பைப் பற்றி ஒருபக்க அளவில் அறிமுகமும், புகைப்படங்கள், கண்டுபிடிப்பைப் பற்றிய படக்காட்சிகளுடன் அந்தந்த வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் 31.08.2019 க்குள் வழங்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments