புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது.

2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை
மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டமும் விதிகளும் (2008) ன் கீழ், கீழ்கண்ட உரிய
ஆவணங்களுடன் 31.08.2019 க்குள் வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி
வரும் இ-சேவை மையம் (e-savai) மூலம் விண்ணப்பிக்கலாம்.

தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற எதிர்வரும் 31.08.2019
க்குள் புல நீல வரைபடம் (6 நகல்கள்), பத்திர ஆவணங்கள் (அசல் ரூ 5 நகல்கள்), ரூ.500 ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை), நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் மனு செய்து கொள்ளலாம்.

மேலும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி
நாள் 31.08.2019 ஆகும். இத்தேதிக்குள் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள்
மட்டுமே பரிசீலனை செய்யப்படும். 31.08.2019 க்கு பின்னர் விண்ணப்பிக்க
இயலாது எனவும், அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி
பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னதாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments