உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2019: பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின்படி 2019 - 2020-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒன்று அல்லது அதற்கு மேல் காலவரையறையுள்ள முதுகலை பட்டம் (PG Courses), இளங்கலை பட்டம் (Degree) மற்றும் டிப்ளோமா (Diploma) படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பத்திரிகை துறை (Journalism), சட்டம் (Law) மற்றும் சமூகப் பணி (Social Work) போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.popularfrontindia.org என்ற இணையதள லிங்க்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31 ஆகஸ்ட் 2019. விண்ணப்பிப்பது குறித்தான மேலும் தகவல்களுக்கு மாணவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

2011-12 கல்வியாண்டில், தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தொடங்கியது. இதுவரை 7.78 கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை 13 மாநிலங்களை சார்ந்த 12545 மாணவர்களுக்கு (6024மாணவர்கள், 6521 மாணவியர்கள்) வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 270 மாணவர்களுக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளோம். அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு கல்வி உதவித்தொகைக்கான நிதியை திருப்பி செலுத்தி பொது சமூகத்திற்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சேவை செய்திட வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments