சென்னை மெட்ரோவில் உதவியாளர் வேலை: ரூ.25 ஆயிரம் சம்பளம்!



சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் உதவியாளர் (கணக்கு), உதவியாளர் (ஆவண நிர்வாகப் பணி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு பங்களிப்புடன் நடத்தப்படும் போக்குவரத்து நிறுவனமாகும். முதல் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் முழுவதுமாக முடிவடைந்து, இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவியாளர் (கணக்கு), உதவியாளர் (ஆவண நிர்வாகப் பணி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி: உதவியாளர் (கணக்கு) - 02

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவியாளர் (ஆவண நிர்வாகப் பணி) - 01

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயதுவரம்பு: 14.08.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

https://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-05-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Post a Comment

0 Comments