கோபாலப்பட்டிணம் ஜமாஅத் சார்பாக நவாஸ் கனி MP அவர்களிடம் மண்டபம் கட்டித்தர வேண்டி கோரிக்கை மனு



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் ஜமாஅத் தலைவர் ஜனாப் ASM. செய்யது முகம்மது அவர்களின்
தலைமையிலான ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் GPM பொது நல சேவை சங்க உறுப்பினர்கள் இணைந்து  இன்று 19/08/2019 திங்கள்கிழமை  மரியாதைக்குரிய இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜனாப் N.நவாஸ் கனி MP அவர்களை இராமநாதபுரத்தில் சந்தித்து கோபாலப்பட்டினத்தில்  திருமண மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கித் தருமாறு மனு கொடுக்கப்பட்டது.


ஜனாப் N.நவாஸ் கனி MP அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி நிச்சயமாக நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் ஜமாஅத் துணைத் தலைவர் மு.ராஜா முகம்மது ,ஜமாஅத் செயலாளர் இ.சாகுல் ஹமீது, இணைச்செயலாளர்  அ.கி.ஜகுபர் அலி, கணக்காளர் காதர் பாட்சா, பாண்டியர் சேக்காதி ராவுத்தர் (இயூமுலீ), அபுதாஹீர் (மமக), அமீர் (CPIM), சுலைமான் (இயூமுலீ) ஆகியோர் உடனிருந்தனர் .


தகவல்: அமீர்

Post a Comment

0 Comments