புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
அதி நவீன தொழில்நுட்ப வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாய பணிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையிலும் மற்றும் விவசாயிகளின் சொந்த பயன்பாட்டிற்கு புதிய வேளாண் எந்திரங்கள் அரசு மானியத்திலும் வாங்கி பயன்படுத்தி கொள்ள பல்வேறு திட்டங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு டிராக்டர் மற்றும் இதர எந்திரங்கள், கருவிகளை வேளாண்மை பொறியியல் துறை மூலம் பெற்று கொள்ளலாம். நிலம் சமன்படுத்துதல், சீரமைத்தல் பணிகளுக்கு நிலமேம்பாட்டு திட்ட எந்திரங்களான பொக்லைன் எந்திரம் மணிக்கு ரூ.840 என்ற வாடகையிலும் மற்றும் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள டிராக்டர்கள் மணிக்கு ரூ.340 என அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி உபகோட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு மானியம்
புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல் பணிகளை மேற்கொள்ள சூழல் விசைத்துளை கருவிகள் ஒரு மீட்டருக்கு ரூ.130 வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவைப்படும் நவீன ரக வேளாண் கருவிகள், எந்திரங்கள் வாங்க 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மானியம் மற்றும் வட்டார, கிராம அளவில் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் சேவை மையங்கள் அமைக்க 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மானியம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தில் வேளாண்மை எந்திரமயமாக்கல் துணை இயக்க திட்ட நெறிமுறைகளின்படி விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு மற்றும் மானிய விலையில் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் அவர்களின் அலுவலக தொலைபேசி எண்: 04322-221816 மற்றும் உதவி செயற் பொறியாளர், திருக்கோகர்ணம் புதுக்கோட்டை கைபேசி எண்: 9443264168, 9976127540 மற்றும் உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை ராஜேந்திரபுரம் பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி கைபேசி எண்: 9442178763, 9443456682 அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/08/2019081449-1.pdf

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.