தமுமுக தலைமையில் திருச்சியில் கருப்பு சட்டங்களை கண்டித்து ஆகஸ்ட் -25யில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்.....!ஆகஸ்ட் 25 அன்று மத்திய அரசின் கருப்பு சட்டங்கள் மற்றும் கும்பல் படுகொலைகளை கண்டித்து சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் திருச்சியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டங்கள், முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீர் மாநிலச் சிறப்பு அந்தஸ்து பறிப்புச் சட்டம் ஆகியவற்றை கண்டித்தும், கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் போராட்டம்  நடத்த உள்ளோம்.

இந்தச் சட்டங்களால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை காஷ்மீரில் நுழைய வைப்பதற்காக இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


முத்தலாக் சட்டம் சிவில் சட்ட வடிவில் இருந்தது. தற்போது கிரிமினல் குற்ற வடிவ சட்டமாக மாற்றியுள்ளனர். அதற்கு 3 ஆண்டு தண்டனை என்பது ஏற்க முடியாதது. மற்றொரு சட்டத்தால் தனி நபர் பயங்கரவாதி என்று அறிவிக்க அச்சட்டத்தில் வழிவகை உள்ளது.  பல சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளைப் பறித்துள்ளனர்.

இவற்றை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும், மனித நேய மக்கள் கட்சியும் இணைந்து ஆகஸ்ட் 25- ஆம் தேதி திருச்சி, மதுரை, சென்னை, திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995-யில் முதன்முதலாக தடா என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக 1995 ஆகஸ்ட் 25 முதன்முதலாலக அன்று பேரணி நடத்தியது.

தனது வெள்ளி விழா ஆண்டான 2019 ஆகஸ்ட் 25 அன்று மத்திய அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments