புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் "A' திரவம் வழங்க ஏற்பாடு



புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 1.32 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் - A திரவம் அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

குழந்தைகளிடையே காணப்படக் கூடியவைட்டமின் - A பற்றாக்குறையைத் தடுக்கும் வகையில், அனைத்து குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்திடும் விதமாகவும் வைட்டமின் - "A" குறைபாடு தடுப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஆக. 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1. 32 லட்சம் குழந்தைகளுக்கு (6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு) வைட்டமின் - A திரவம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த ஒரு வார காலத்துக்கு வழங்கப்பட உள்ளது.

அங்கன்வாடி மையங்களில் ஏதேனும் குழந்தைகள் விடுபட்டிருப்பின் வீடு, வீடாகச் சென்று வைட்டமின் - 'A' திரவம் வழங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் வைட்டமின் - 'A' திரவத்தினை வழங்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments