மணமேல்குடியில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ECR BUILDERS ASSOCIATIONS பொறியாளர்கள் சார்பாக கட்டிட தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும், ஆற்று மணல் தட்டுப்பாட்டை அரசு சமூகப்படுத்த வேண்டும்,
கட்டுமான பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், எம்.சாண்ட் தரம் மற்றும் விற்பனையை சரி செய்ய வேண்டும், ஆன்லைன் மணல் விற்பனையை முறைப்படுத்த வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் மணமேல்குடி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






ஆர்ப்பாட்டத்தில் கட்டுமாவடி முதல் மீமிசல் வரையிலான வர்த்தக சங்கங்கள், வணிகர் சங்கங்கள், ஏஐடியூசி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், மாட்டுவண்டி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இப்படிக்கு,
Er சாகுல் ஹமீது
தலைவர்,
ECR Builders Association
8056447450

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : Er. முகமது ரபீக்

Post a Comment

0 Comments