"நோயாளிகளை கவனமாகப் பார்த்து கொள்வது செவிலியர்களின் கடமை'



நோயாளிகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது செவிலியர்களின் கடமை என்றார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்  அழ. மீனாட்சிசுந்தரம்.

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியின் 7ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு , கல்லூரிச் செயலர் நா. சுப்பிரமணியன், அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி, விழாவைத்  தொடக்கி வைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் விழாவில் பங்கேற்று, 47 பி.எஸ்சி பட்டங்களையும், 3 எம்.எஸ்சி பட்டங்களையும் வழங்கிப் பேசியது:

செவிலியர் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பணி.  எத்தனைத் துன்பங்கள் நேரிட்டாலும் நோயாளிகளை கனிவோடும் கவனமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது செவிலியர்களின் கடமை. எனவே எந்த நிலையிலும் தங்கள் கடமையிலிருந்து  விடுபடாது செவிலியர்கள் பணியாற்ற வேண்டும். அதை பட்டம் பெறும் இந்த நிலையிலிருந்து உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி முதல்வர் எஸ். சுமித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக துணை முதல்வர் வாணி சித்ரா தேவி வரவேற்றார். நிறைவில், பேராசிரியர் மகிபாலன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments