புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து துறைகள் இணைந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோடடை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் சாலைகளில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக கீரனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 கார்கள் மோதி விபத்தை ஏற்படுத்தி 5 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதுபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் விபத்து ஏற்பட்டு இறந்து விடுகின்றனர். சில இடங்களில் நடக்கும் விபத்துகளில் காயமடைந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்துகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் அஜாக்கரதையாக ஏற்பட்ட விபத்துகள் என்று அந்தந்த விபத்துகள் நடந்த இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் தெரிவித்தனர். விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் கட்டாயமாக காயத்துடன் தப்பித்து இருக்கலாம்.
நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் கட்டாயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் விதிக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை, சீட் பெல்டின் முக்கியதுவத்தையும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுபோல் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகன ஓட்டிகளின் லைசென்சை பெற்று அந்தந்த மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர். அங்கு வாகன ஓட்டிகள் சென்று சில நடைமுறைகளை செய்துவிட்டு லைசென்சை பெற்று செல்கின்றனர். அங்கேயும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் நடைமுறைகைளை முடித்து கொண்டு எந்தவித விழிப்புணர்வும் செய்யாமல் அப்படியே அனுப்பி வைக்கின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், சீட்பெல்ட் முக்கியத்துவம் மற்றும் மோட்டார் வாகன சட்ட வசதிகள் உள்ளிட்டவைகள் தெரியவில்லை. இதனால் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன துறை இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி விபத்துகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.