கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி...!



இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) மற்றும் (தமுமுக-மமக கத்தர் மண்டலம்) சார்பாக நேற்று 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில்  அல்கோர் கிளை சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி  அல்கோர் மீன் மார்க்கெட் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்த மாதாந்திர தொடர் நிகழ்ச்சியில் கோபாலப்பட்டினம் சகோதரர் முகம்மது சித்திக் அவர்கள் தலைமை வகித்தார். மௌலவி. ஜமீல் அஹ்மத் உமரி  அவர்கள் நெருங்கும் மறுமை என்ற தலைப்பிலும் மற்றும் மௌலவி ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் நர்குணம் ஓர் உயர்ந்த பண்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.





இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்

Post a Comment

0 Comments