பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!



பெஹ்லு கான் கொலை வழக்கு குற்றவாளிகள் ஆறு பேரையும் ஜெய்ப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பெஹ்லு கான் என்பவர் தமது மகன்களுடன் ஜெய்பூர் கால்நடை சந்தையில் வாங்கிய மாடுகளை, சொந்த மாநிலமான அரியானாவிற்கு வாகனத்தில் வைத்து கொண்டு சென்றார்.

டெல்லி-ஆல்வார் நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் பெஹ்ரர் அருகே, பசுபயங்கரவாத கும்பல் அவரது வாகனத்தை வழி மறித்தனர். வாகனத்தில் இருந்த பெஹ்லு கான் மற்றும் அவரது இரு மகன்களை மிக கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பெஹ்லு கான் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெஹ்லு கான் மற்றம் அவரது மகன்கள் சரமாரியாக தாக்கப்படும் காட்சி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை தொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆறு பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இந்நிலையில் அனைத்து விசாரணைகளும் முடிவடந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப் பட்டது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பசுவுக்காக நடத்தப் பட்ட இந்த கொலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்ட நிலையில், இந்த தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Post a Comment

0 Comments