கோபாலப்பட்டினத்தில் ஒருநாள் பெய்த மழைக்கே ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கும் மழைநீர்!!



புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தில் உள்ள தார்ச்சாலை சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் சிறு குட்டையாக உருமாறி உள்ளது. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி. மேலும் தேங்கியுள்ள மழைநீரால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து வருகின்றனர். குறிப்பாக மழைநேரத்தில் சொல்லவே வேண்டியதில்லை, அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



குறிப்பாக அவ்வழியாக குடிநீர் எடுப்பதற்கு ஊத்துக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் இச்சாலை வழியாக மீமிசல் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.







மேலும் கோபாலப்பட்டினத்தில் பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது .

ஆகையால் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் தனி அலுவலர் அவர்கள் கோபாலப்பட்டினத்தில் வேறு எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகின்றது மற்றும் மிகவும் மோசமான சாலைகளை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து விரைவில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0 Comments