மக்காவில் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களுக்கு உதவி செய்த தமுமுக தன்னார்வலர்கள் !



இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணம் கடந்த மாதம் தொடங்கியது. இதில் மிகவும் சிறப்பான அரஃபா தினத்தில் பல லட்சம் இஸ்லாமியர்கள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடினர்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு உதவும் வகையில் தமுமுக சார்பில் ஆண்டுதோறும் தன்னார்வலர்கள் பங்கேற்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் தமுமுக சார்பில் சுமார் 150 பேர் தன்னார்வலர்களாக ஹாஜிகளுக்கு உதவி செய்தனர். இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த 3 பேரும், ஆர்.புதுப்பட்டிணத்தை சேர்ந்த 1 நபரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.























Post a Comment

0 Comments