புதுக்கோட்டை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், 2019-20-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் பெற மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை புதியது மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும், காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது. எனவே மாணவ-மாணவிகள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டு உள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம்...
ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பாத மாணவ-மாணவிகளின் இணைய தள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படாது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பித்தில் குறிப்பிடப்பட்டு உள்ள சான்று ஆவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ராகவன், திராவிடச்செல்வம், ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.