அதிராம்பட்டிணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு !தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் ஹக்கீம். இவர் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் B.Sc மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

அதிரையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி மதியம் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய இவர், படுகாயமடைந்தார். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு, கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று 30-ஆம் தேதி ஹக்கீம் உயிரிழந்தார். அதிரையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளம் வயது கல்லூரி மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..!!

அவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யுங்கள் ..!!

Post a Comment

0 Comments