பாரதிதாசன் பல்கலை. கல்லூரிகளிடையேயான நடைபெற்ற ஆடவர் பூப்பந்து..!!பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் பூப்பந்தாட்டப் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியினர் முதலிடம் பெற்றனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் பூப்பந்தாட்டப் போ ட்டி மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

போட்டிக்கு, கல்லூரிக்குழு தலைவர் சி. நாகப்பன் தலைமை வகித்தார். போட்டியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஈ.வே.ரா.கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் ரோவர் கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியினர் உள்ளிட்ட 11 அணியினர் பங்கேற்று விளையாடினர்.

 போட்டியை மாநில நடுவர்கள் என்.செந்தில்பாண்டியன், க. அன்புமணி, பி. திருலோகசுந்தர், அர்த்தரசு ஆகியோர் வழிநடத்தினர்.

முதலிடத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியினரும், இரண்டாம் இடத்தை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியினரும், மூன்றாம் இடத்தை மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி அணியினரும், நான்காம் இடத்தை திருச்சி ஈ.வே.ரா. அரசு கல்லூரி அணியினரும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கும் விழா மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி விளையாட்டுத் திடலில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவ.சொர்ணம் தலைமைவகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியரும், விளையாட்டு செயலருமான  அ.பழனிச்சாமி பங்கேற்று வெற்றிபெற்ற அணியினருக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கிப் பேசியது:

வாய்ப்புகள் எல்லோருக்கும் கிட்டும். அந்த வாய்ப்புகளை யார் சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள்  ஆகின்றனர் என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம்.
வெற்றியை தக்கவைத்துக்கொள்பர்களே வெற்றியாளர்கள். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் தகுதியை, விளையாட்டுத்திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள். விவேகானந்தர் கூற்றின்படி உங்களை நம்புங்கள். உங்களிடம் உள்ள திறனை வெளிக்கொண்ர்ந்து வெற்றி பெறுங்கள்.

 அதுபோல கல்லூரியில் சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றி பெற உடற்கல்வி ஆசிரியர்கள் உதவவேண்டும் என்றார்.

 முன்னதாக கல்லூரி பேராசிரியர் மா.தமிழ்ச்செல்வி வரவேற்றார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மா.சுரேஷ்குமார் நன்றி கூறினார். 

Post a Comment

0 Comments