புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.


 புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.08.2019 அன்று முற்பகல் 11.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

 எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், விதவைகள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர் அவர்களின் குறைகள் குறித்த மனுக்களை அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேடியாக வழங்கலாம். மனு அளித்திட விரும்பும் முன்னாள் படைவீரர், விதவைகள் அவர்களது கோரிக்கை குறித்த மனுக்களை இரண்டு நகல்கள், அடையாள அட்டை நகலுடன் வழங்க வேண்டும்.

 எனவே முன்னாள் படைவீரர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments