புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்காத வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் பட்டியலை மாவட்ட நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 ஊக்கத்தொகை அளிக்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு; தகுதியான விவசாயிகள் விண்ணப்பிப்பதற்கான பணி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஊக்கத்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1,20,332 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்களின் களப்பணியின் போது 38,203 விவசாயிகள் வெளியூரில் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியல் மற்றும் வெளியூரில் வசிக்கும் விவசாயிகளின் பட்டியல்  www.pudukkottai.tn.nic.in என்ற இணையதளத்தில் வட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியூரில்  வசிக்கும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வட்டாட்சியரிடமோ விண்ணப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் இல்லாத விவசாயிகள் விபரம்:

https://pudukkottai.nic.in/ta

பயனாளிகளின் விபரம்:

https://pudukkottai.nic.in/ta

Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/08/2019081263.pdf

Post a Comment

0 Comments