புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மானிய விலையில் விதைகள், உரங்கள் பெற அழைப்புமானிய விலையில்  விதைகள், உரங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அன்னவாசல் வேளாண் உதவி இயக்குநர் ஆர். சுருளிமலை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அன்னவாசல் வட்டார விவசாயிகள், நடப்பு சம்பா பருவத்தில் விதைப்பு செய்வதற்குத் தேவையான சம்பா மசூல், டி.கே.எம் 13 , என்.எல்.ஆர், ஆடுதுறை 45 ஆகிய நெல் ரக விதைகள் விதை கிராமத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புக் குழுமம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், மானிய விலையில் அன்னவாசல் மற்றும் இலுப்பூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மானாவாரி சாகுபடிக்குத் தேவையான உளுந்து, தட்டைப்பயறு, துவரை, பாசிப்பயறு விதைகள், சோள விதைகள், அசோஸ்பைரல்லம் , பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற நுண்ணுயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.நெல், சிறுதானியங்கள்,பயறு வகைகள்  நிலக்கடலை, தென்னை,  கரும்புப் பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விதைகள், உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது, ஆதார் எண், கணிணி சிட்டா மூலம் வாங்கிப் பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments