கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது
இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நேற்று  அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நன்றி: மாலை மலர்

Post a Comment

0 Comments