கோபாலப்பட்டினம் பொதுநல அமைப்பு மற்றும் ஜமாத்தார்களுக்கு அழைப்பு விடுத்த தமுமுக மற்றும் மமகபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினத்தில் 22.08.2019 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் வருகிற ஆகஸ்ட் 25 திருச்சியில்
நடைபெறக்கூடிய மத்திய அரசின் முத்தலாக், UAPA, NIA காஷ்மீர் 370,35A சட்டம் ரத்து ஆகிய மக்கள் விரோத கருப்புச்சட்டங்கள் மற்றும் கும்பல் படுகொலையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கோபாலபட்டினம் ஜமாத் தலைவர் அவர்களையும், GPM மக்கள் மேடை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்களை சந்தித்து வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திருச்சியில் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.இதில் தமுமுக மமக  கோபாலபட்டினம் கிளை நிர்வாகிகள், ஆவுடையார்கோவில் ஒன்றிய நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : முஹமது மசூத்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி
கோபாலப்பட்டினம் கிளை

Post a Comment

0 Comments