புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொறியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டடை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியும், அறந்தாங்கியில் ஒரு கலை அறிவியல் கல்லூரியும் உள்ளது. புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி என 4 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகளில் ஏழை எளிய விவசாயிகளின் பிள்ளைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீண்டநாட்களாக மாவட்டத்திற்கு அரசு பொறியியல் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை பொறியியல் கல்லூரி அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிக பணம் கொடுத்து தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அருகாமையில் உள்ள திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. ஆனால் புதுக்கோட்டையில் மட்டும் ஏன் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கவில்லை என்று தெரியவில்லை.
இதனால் இனிவரும் காலங்களிலாவது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என தனியாக ஒரு அனைத்து துறைகளுடன் கொண்ட பொறியியல் கல்லூரியை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு பொறியியல் கல்லூரி அமைத்தால் பல்வேறு தரப்பினருக்கு இங்கு வேலை வாய்ப்புகள் உயரும்.
மேலும் மாவட்டத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கவுன்சிலிங்களின் அடுத்த மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு செல்லாமல் அவர்களுடைய சொந்த மாவட்டத்திலேயே தரமான பொறியியல் படிப்பை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
ஒரு பொறியியல் கல்லூரி அமைந்தால் அந்த பகுதியில் சிறிய விடுதிகள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைத்து பல்வேறு தரப்பினருக்கும் வேலை வழங்கலாம். இதனால் அந்த பகுதியில் வேலை இன்மை குறைந்து வருமானம் பெருகும்.
இப்படி பல தரப்பினருக்கம் நண்மை தரும் இந்த அரசு பொறியியல் கல்லூரியை புதுக்கோட்டையில் அமைக்க விரைந்து தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றனர்.
கல்வியாளர்கள் கோரிக்கை கால்நடைப்பண்ணை இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி அமைக்க தேவையான இடம், தண்ணீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டு கால்நடைப்பண்ணைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கலாம். இதனால் இடத்தை காரணம் காட்டி பொறியியல் கல்லூரி அமைவதை காலம் தாழ்த்தாமல் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.