கோபாலப்பட்டினத்தில் பலத்த மழை



கோபாலப்பட்டினம் பகுதியில் ஞாயிறுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோபாலபட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மீமிசல், ஆர்.புதுப்பட்டினம், ஏம்பக்கோட்டை, SP மடம், செய்யானம், கீழஏம்பல், ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  கடந்த சில மாதங்களாக கடும் வெயில் காரணமாக வெப்பமாக காணப்பட்டது. இந்நிலையில் குளம், குட்டை, கண்மாய்கள் வறண்டு கடும் தண்ணீர் தட்டுபாடு நிலவியது, இந்நிலையில் ஞாயிறுக்கிழமை இரவு கோபாலப்பட்டினம் பகுதியில் பலத்த மழை பெய்தது. தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.



கோபாலப்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதுமான மழை பெய்யாததால் கடுமையான வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இந்நிலையில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும்  மழை காரணமாக தங்க மஹால் திருமண மண்டபம், பெண்கள் மதராஸா பகுதி மற்றும் கடற்கரை  பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றது. இம்மழை காரணமாக இப்பகுதியில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து மழை பெய்தததால், கோபாலப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.




Post a Comment

0 Comments