புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில், ரியாஸ்கான் மிஸ்டர் புதுக்கோட்டை பட்டத்தை தட்டி சென்றார்புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

புதுக்கோட்டை திலகர் திடல் தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆணழகன் அமைச்சூர் கழகம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 45 கிலோ, 50 கிலோ, 55 கிலோ மற்றும் 60 கிலோ என நான்கு பிரிவின் கீழ் போட்டி நடைபெற்றது.

வீரர்கள் ஒருவரும் தனது கட்டு உடலை பல விதங்களில் செய்து காண்பித்து அசத்தினர். போட்டியில் சிறந்த வீரராக ரியாஸ்கான் தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்திய அளவில் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் போட்டியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.

Post a Comment

0 Comments