"அறந்தாங்கி மார்க்கமாக மதுரைக்கு விரைவில் ரயில் சேவை'- நவாஸ் கனி MP அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி!!!காரைக்குடி - திருவாரூர்  ரயில்சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி MP அவர்கள்

அறந்தாங்கி ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் மேலும் பேசியது:

இங்கு ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மையம் விரைவில் இயங்கும். அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் மதுரை செல்வதகாகவும் இணைப்பு ரயில் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவிருப்பதால் மானாமதுரை வழியாக மதுரை செல்ல இணைப்பு ரயில் விட விரைவில் ஆவன செய்யப்படும் என்றார்.

அறந்தாங்கி  ரயில் பயணிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.ஆர்.குமார் தலைமை வகித்தார். முன்னாள் அறந்தாங்கி எம்எல்ஏ உதயம் சண்முகம், முன்னாள் ஆவுடையார்கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் இரா.துரைமாணிக்கம், ரோட்டரி கிளப் தலைவர் க.சுரேஸ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

Post a Comment

0 Comments