5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு..!!ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


முன்னதாக இதுதொடர்பான பரிந்துரையினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதுதொடர்பான முடிவினை மாநில அரசுகள் ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.

இதுதொடர்பாக மாநில அமைச்சரவையினைக் கூட்டி விவாதித்த பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்பு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே (2019-2020) பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த முடிவினை அடிப்படையாக வைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments