நர்சிங் படித்தவர்களுக்கு சவுதியில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளத்தில் வேலை!தமிழக அரசின் கீழ் செயல்படும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேசன் லிமிடெட் நிறுவனம், நர்சிங் படித்தவிட்டு வேலை தேடுபவர்களுக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சவுதி அரேபியாவில் பணிபுரிய, செவிலியர் எனப்படும் நர்சிங் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: ஸ்டாஃப் நர்ஸ் - சவுதி அரேபியா

காலிப்பணியிடம்: 160

முக்கிய தேதிகள்:

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 11.09.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 24.09.2019 முதல் 05.10.2019 வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள்: 

மும்பை - 24.09.2019 to 25.09.2019
டெல்லி - 27.09.2019 to 29.09.2019
சென்னை - 01.10.2019 to 02.10.2019
கொச்சி - 04.10.2019 to 05.10.2019

வயது வரம்பு: 21-35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

ஊதியம்: ரூ. 80,000 முதல் ரூ.1,00,000 வரை

கல்வித்தகுதி: நர்சிங்,  பணி அனுபவம் அவசியமாக பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பிக்க விரும்புவோர், ovemclmohsa2018@gmail.com - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை 11.09.2019 - க்குள்அனுப்ப வேண்டும்.

மற்ற சலுகைகள்:

இலவச விமானக் கட்டணம், உணவு, தங்குமிடம்,வருட விடுமுறை போன்று மற்றும் பல சலுகைகள் இதில் அடங்கும்.

மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு, http://www.omcmanpower.com/jobInfo.php?jid=75 என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Post a Comment

0 Comments