புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடிநீர், தெருவிளக்கு புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்புகுடிநீர் மற்றும் தெருவிளக்குகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் 1800-425-9013 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பழுதுகள் ஏற்பட்டாலோ, தெருவிளக்குகள் எரியாமல் இருந்தாலோ அது தொடர்பான புகார்களை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கட்டணமில்லாத் தொலைபேசியில்  தெரிவிக்கலாம்.

ஆவுடையார்கோவில்- 18004259017, 
மணமேல்குடி- 1800 425 9021, 
அறந்தாங்கி- 18004259015, 
அன்னவாசல்- 18004259014,
அரிமளம்- 18004259016,
கந்தர்வகோட்டை -18004259018,
கறம்பக்குடி- 18004259019,
குன்றாண்டார்கோவில் - 1800 425 9020,
பொன்னமராவதி- 1800 425 9022,
புதுக்கோட்டை- 1800 425 9023,
திருமயம் 1800 425 9024,
திருவரங்குளம்- 1800 425 9025,
விராலிமலை- 1800 425 9026
ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து 24 மணி நேரத்திற்கு மேல் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் விவரத்தை மாவட்ட அளவில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக கட்டணமில்லாத் தொலைபேசி எண்  1800-425-9013-இல் புகார் தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments