சவுதி அரேபியாவில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு..தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:
சவூதி அரேபிய நாட்டில் ஜுபைலில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதிற்கு உட்பட்ட  டிப்ளோமா, பி.எஸ்.சி  படித்த  ஆண் செவிலியர்கள்  மற்றும் 40 வயதிற்கு உட்பட்ட இரண்டு வருட பணி அனுபவமுள்ள பி.எஸ்.சி. படித்த  ஆண் பிசியோதெரபிஸ்ட் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

 மேலும் 40 வயதிற்கு உட்பட்ட பெண் லேப்டெக்னிசியன் , எக்ஸ்ரே டெக்னிசியன், சோனோகிரபி டெக்னிசியன் மற்றும் எம்.டி.தேர்ச்சியுடன் 60 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை   மற்றும் சவூதி அரேபிய   நாட்டின் சட்டத்திட்டத்திற்க்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ளவர்கள் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மின்னஞ்சல்  என்ற முகவரிக்கு  தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி  மற்றும்  அனுபவச்சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வருகிற 30.09.2019 தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

 ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன  வலைதளமான www.omcmanpower.com மற்றும் 044-22505886, 22500417, 8220634389 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
     

Post a Comment

0 Comments