தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15 ஆம் தேதி) அறிவித்தது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும். வாக்குப்பதிவு என்னிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும்.
தொடர்ந்து, தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 7. வேட்புமனு திரும்பப் பெற ஏப்ரல் 9 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போதை சட்டப்பேரவை ஆட்சிக் காலம் மே 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
- மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு
- அதிகபட்சமாக 1,200 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என ஏற்பாடு
- வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்
- வாக்காளர்கள் தங்களது செல்போன்களை பாதுகாத்து வைக்க ஏற்பாடு
- வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள்
- ECINET ஆப்-ல் வாக்காளர்கள் தங்களது விவரங்களை பெறலாம்
- நியாயமான அமைதியான முறையில் தேர்தலை நடத்த முடிவு
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.