புதுக்கோட்டை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவில் தற்காலிக வேலைவாய்ப்பு..புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பணிகள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு மூலம் செயல்படுத்தவுள்ளன.

 அதனால், இத்திட்டத்தில் தற்காலிக பணியிடங்களான திட்ட மேலாளர், ஆற்றுப்படுத்துநர், கண்காணிப்பு, மதிப்பீட்டாளர், நிதியாளர் மற்றும் களப்பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

திட்ட மேலாளர் பணிக்கு சமூக அறிவியலில் முதுநிலை பட்டம் மற்றும் 2- 3 ஆண்டு எச்.ஐ.வி. எய்ட்ஸ் தடுப்புப் பணிகளில் அனுபவமும், ஆற்றுப்படுத்துநர் பணிக்கு சமூக சேவையில் முதுநிலை, சமூகவியலில் முதுநிலை, உளவியலில் முதுநிலை பட்டம் மற்றும் 2 ஆண்டு எச்.ஐ.வி. எய்ட்ஸ் தடுப்புப் பணிகளில் அனுபவமும், கண்காணிப்பு, மதிப்பீட்டாளர் மற்றும் நிதியாளர் பணிக்கு கணிணிப் பயிற்சியுடன் கூடிய இளங்கலை வர்த்தகமும் மற்றும் களப்பணியாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு, இலக்கு மக்களாக இருந்தால் 8-ஆம் வகுப்பும் படித்திருக்க வேண்டும்.

மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்,  மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு,  வளர்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை- 622005 என்ற முகவரிக்கு கல்வித் தகுதிச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments